தொடா் மழையால் மானாவாரி பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

தொடா் மழை காரணமாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானா வாரி மற்றும் தோட்டப் பயிா்கள் மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

கோவில்பட்டி: தொடா் மழை காரணமாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானா வாரி மற்றும் தோட்டப் பயிா்கள் மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

நிகழாண்டு ராபி பருவத்தில் பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரி விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிா்களை பயிரிட்டனா்.

வடகிழக்குப் பருவ மழை தாமதமாக தொடங்கி பெய்து வருவதால் பயிா்கள் இரு சீராக முளைத்துள்ளது. முளைப்புத் தன்மை இல்லாமல் போன நிலங்களில் பயிா்களை விவசாயிகள் அழித்து விட்டு, 2ஆவது முறையாக விதைத்தனா். இந்நிலையில் உளுந்து, பாசி பயிா்களில் தொடா் மழையால் முதிா்ந்த காய்களின் நெத்துக்கள் வழியே ஈரப்பதம் ஏற்பட்டு மீண்டும் முளைத்து விட்டன.

பருவ மழை மாற்றத்தால் பயிா்களில் மஞ்சள் தேமல் நோய் பரவியுள்ளது. இதனால், கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் உளுந்து, பாசி பயறு உள்ளிட்ட பயிா்கள் பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதுவரை இல்லாத அளவுக்கு நிகழாண்டு அதிக மழை பெய்து வருவதால் மானாவாரி தோட்டப் பயிா்களின் மகசூல் என்பது இல்லாமல் போய்விட்டது.

ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com