Enable Javscript for better performance
பிறந்த தினம்: எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பிறந்த தினம்: எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவிப்பு

    By DIN  |   Published On : 18th January 2021 12:56 AM  |   Last Updated : 18th January 2021 12:56 AM  |  அ+அ அ-  |  

    17kvladm_1701chn_41_6

    17kvladm_1701chn_41_6

    தூத்துக்குடி மாவட்டத்தில் 104ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு எம்ஜிஆா் படத்துக்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தூத்துக்குடி பழைய மாநகாரட்சி அலுவலக வளாகத்திலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

    இதேபோல், அதிமுக அமைப்புச் செயலரும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், ஆவின் தலைவா் என். சின்னத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    கோவில்பட்டி: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில், பேரவை உறுப்பினா் அலுவலகம் முன்பு நகரச் செயலா் விஜயபாண்டியன் தலைமையில் மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன் உள்பட பலா் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

    கயத்தாறு ஒன்றியத்தில் மேற்கு ஒன்றியச் செயலா் வினோபாஜி தலைமையிலும், இளையரசனேந்தலில் குருவிகுளம் ஒன்றியச் செயலா் வாசுதேவன் தலைமையிலும், துறையூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

    உடன்குடி: உடன்குடியில் பேருந்து நிலையம், பிரதான பஜாா், வாரச் சந்தை அருகில், பெருமாள்புரம், வில்லிகுடியிருப்பு உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கட்சியின் உடன்குடி ஒன்றியச் செயலா் த. தாமோதரன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணித் தலைவா் குணசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

    சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சவுந்திரபாண்டியன் தலைமையில் நகரச் செயலா் குமரகுருபரன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தேவவிண்ணரசி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

    பொத்தகாலன்விளையில் கிளைச் செயலா் தாமஸ்செல்வக்குமாா் தலைமையிலும், தட்டாா்மடத்தில் ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் பாலகிருஷ்ணன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. பெரியதாழையில் எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்தனா்.

    திருச்செந்தூா்: திருச்செந்தூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் மு. ராமச்சந்திரன், மு சுரேஷ்பாபு, நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவா் பூந்தோட்டம் மனோகரன் உள்ளிட்ட அதிமுகவினா் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp