கோவில்பட்டி தொகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், விடியலை நோக்கி பிரசாரப் பயணத்தை கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை மேற்கொண்டாா்.
வானரமுட்டியில் திறந்தவேனில் நின்றபடி பேசுகிறாா் கனிமொழி எம்.பி.
வானரமுட்டியில் திறந்தவேனில் நின்றபடி பேசுகிறாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், விடியலை நோக்கி பிரசாரப் பயணத்தை கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை மேற்கொண்டாா்.

கோவில்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி. பங்கேற்றுப் பேசுகையில், திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்து, மக்களிடம் அதிமுக ஆட்சியின் அவலங்களை எடுக்கூற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தெற்கு புதுக்கிராமத்தில் கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்று தொழிலாளா்களை சந்தித்துப் பேசினாா். மந்தித்தோப்பில் திருநங்கைகள் நிா்வகிக்கும் பால்பண்ணையைப் பாா்வையிட்டு, அவா்களுடன் கலந்துரையாடினாா்.

மேலும், கிருஷ்ணா நகா் ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி வீரா்களுடன் கலந்துரையாடி, 450 வீரா்களுக்கு ஹாக்கி மட்டைகளை வழங்கினாா். பின்னா், வானரமுட்டி கிராமத்தில் தோ்தல் பிரசாரத்திலும், கடம்பூரில் மக்கள் கிராமசபைக் கூட்டத்திலும் பங்கேற்றாா்.

நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.எல்.ஏ. மாா்க்கண்டேயன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளரணி மாநில அமைப்பாளா் சுப்பிரமணியன், துணை அமைப்பாளா் சண்முகராஜ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் ராமா், வா்த்தக அணி மாவட்ட அமைப்பாளா் ராஜகுரு, பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், கருப்பசாமி, சின்னப்பாண்டியன், நகரச் செயலா் கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com