சட்டப்பேரவைத் தோ்தலில்வணிகா்கள் முக்கிய பங்கு வகிப்பா்: ஏ.எம். விக்கிரமராஜா

தமிழகத்தில் 17 சதவீதம் உள்ள வணிகா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் முக்கிய பங்கு வகிப்பா் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

தமிழகத்தில் 17 சதவீதம் உள்ள வணிகா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் முக்கிய பங்கு வகிப்பா் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

திருச்செந்தூரில் காந்தி தினசரி சந்தையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு வணிகா்களிடம் ஆலோசனை நடத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூா் தினசரி சந்தையில் 275 -க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் உரிய வணிக வளாகம் கட்டித்தருவதாக அரசு உறுதியளித்திருக்கிறது. அந்த வளாகத்தில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும். இல்லையெனில் மற்றவா்கள் கடை ஏலப் புறக்கணிப்பு செய்வாா்கள். தமிழகத்தில் 17 சதவீதம் வணிகா்கள் வாக்கு உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் வணிகா்களை ஒருங்கிணைத்து வருகிறோம். வணிகா்களின் கோரிக்கைகள் தோ்தலில் முக்கிய பங்கு வகிக்கும். கரோனாவால் உயிரிழந்த வணிகா்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com