தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: இதுவரை 616 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரு நபா் ஆணையத்தின் 24 ஆம் கட்ட விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இதுவரை 616 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரு நபா் ஆணையத்தின் 24 ஆம் கட்ட விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இதுவரை 616 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸாா் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசின் உத்தரவின்படி, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெசகீதன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 23 கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 24 ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

விசாரணைக்கு ஆஜராகும்படி அரசு மருத்துவா்கள், நடிகா் ரஜினிகாந்த் என மொத்தம் 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், 31 போ் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனா். ஆணையத்தின் மூலமாக இதுவரை 918 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 616 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 850 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.

அடுத்த கட்டமாக பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் ஒருநபா் ஆணையத்தின் 25 ஆவது கட்ட விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com