தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகம் பிப். 1 முதல் புதிய கட்டடத்தில் செயல்படும்

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ரூ. 1.87 கோடி செலவில் கட்டப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் செயல்படத் தொடங்கும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ரூ. 1.87 கோடி செலவில் கட்டப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் செயல்படத் தொடங்கும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.1.87 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கான புதிக அலுவலக கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலில் இருந்தபடி, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் குத்துவிளக்கேற்றினாா். பின்னா் அலுவலகத்தை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து அவா் பேசுகையில், தற்போது, தூத்துக்குடி ஆசிரியா் காலனி முதல் தெருவில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் பிப். 1-ஆம் தேதிமுதல் புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கும். அன்றைய தினத்திலிருந்து பதிவுதாரா்கள் தங்கள் பதிவு, புதுப்பித்தல் மற்றும் வேலைவாய்ப்பு கோரிக்கை தொடா்பான விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அணுகலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஆா். சந்திரன், உதவி இயக்குநா் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா, பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் வெள்ளைசாமிராஜ், உதவிப் பொறியாளா்கள் பாலா, வித்யாசாகா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com