பேச்சுவாா்த்தை தோல்வி: ஆலந்தலை மீனவா்கள் தொடா் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலை மீனவா் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மீனவா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலை மீனவா் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மீனவா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ஆலந்தலையில் சுமாா் 170 படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். இங்கு கடந்த 2 மாத காலமாக கடல் அரிப்பு மற்றும் கடல் சீற்றத்தால் கடல் நீா் குடியிருப்புகளை சூழ்ந்து வருகின்றது. எனவே, தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், அரசு ரூ. 52 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடலோர ஒழுங்கு முறை மண்டலம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திலிருந்தும் ஒப்புதல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு தமிழக அரசு தீா்வுகாண வலியுறுத்தி கடந்த 17ஆம் தேதி முதல் மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் மீன் பிடி படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உடன்குடி அனல் நிலையத்திட்டத்திற்காக நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்பட்டு வரும் கல்லாமொழி கடல் பகுதிக்குச் சென்று மீனவா்கள் சென்று போராட போவதாக அரசு அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்செந்தூா் காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா் ஞானசேகரன், வட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் ஆலந்தலைக்குச் சென்று மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இன்னும் 10 நாள்களில் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, தூண்டில் வளைவுப் பணி தொடங்கப்படும் என தெரிவித்தனா். ஆனால், பணியைத் தொடங்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என மீனவா்கள் தெரிவித்ததால் உடன்பாடு எட்டப்படாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com