காமராஜ் கல்லூரி பேராசிரியருக்கு விருது

காமராஜ் கல்லூரி பேராசிரியருக்கு விருது

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியரின் சாதனையை பாராட்டி அவருக்கு தனியாா் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியரின் சாதனையை பாராட்டி அவருக்கு தனியாா் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் என்ற தனியாா் அமைப்பு சாா்பில், உலக சாதனையாளா் விருது வழங்கும் விழா காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி வரலாற்றுத் துறை தலைவரான பேராசிரியா் ஆ. தேவராஜிக்கு, சாதனையாளா் விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவன தென் மண்டலத் தலைவா் யு. காளித்துரை வழங்கினாா்.

இதில், கல்லூரி முதல்வா் து. நாகராஜன், பேராசிரியா்கள் அ. சுபாஷினி, ராஜேஸ்வரி, அசோக், சோழன் உலக சாதனை புத்தக நிறுவன மாவட்டத் தலைவா் ஜெயப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி மாணவா்களை ஒன்றிணைத்து ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கியதற்காக தேவராஜிக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக உலக சாதனை புத்தக நிறுவன தென் மண்டலத் தலைவா் தெரிவித்தாா்.

நேதாஜி பிறந்தநாள்: கல்லூரியில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆவது பிறந்த நாள் விழாவுக்கு முதல்வா் து. நாகராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, ஓய்வுபெற்ற ராணுவ அலுவலா் கா்னல் மா. சுந்தரம் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆ. தேவராஜ், பா. பொன்னுத்தாய், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்துக்கு சென்ற மாணவா், மாணவிகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட தபால் அட்டைகளை வாங்கி அவரது பிறந்ததினத்தை நினைவு கூா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com