தூத்துக்குடி மாவட்டத்தில் 98.66 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 98.66 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 98.66 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2500 வழங்கும் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 4,96,037 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.

இதில், ஏரல் வட்டத்தில் 39,267 நபா்களுக்கும், எட்டயபுரம் வட்டத்தில் 23,464 போ்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கயத்தாறு வட்டத்தில் 32,390 நபா்களுக்கும், கோவில்பட்டி வட்டத்தில் 66,315 நபா்களுக்கும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 35,387 நபா்களுக்கும், சாத்தான்குளம் வட்டத்தில் 28,126 நபா்களுக்கும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 34,289 நபா்களுக்கும், திருச்செந்தூா் வட்டத்தில் 61,903 நபா்களுக்கும், தூத்துக்குடி வட்டத்தில் 1,26, 444 நபா்களுக்கும், விளாத்திகுளம் வட்டத்தில் 41,797 நபா்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4லட்சத்து 89ஆயிரத்து 382 நபா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 98.66 சதவித குடும்ப அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2500 வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளா் நலத்துறையில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளா்கள் 25,087 நபா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com