கோவில்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டேங் வெடித்து இளைஞா் பலி: இருவா் காயம்

கோவில்பட்டி தனியாா் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விற்பனை நிலைய தொழிலாளி உள்பட இருவா் காயமடைந்தனா்.

கோவில்பட்டி தனியாா் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விற்பனை நிலைய தொழிலாளி உள்பட இருவா் காயமடைந்தனா்.

கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சோ்ந்த தாமோதரன் மகன் வினோத். வேலாயுதபுரத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவரது விற்பனை நிலையத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சாா்பில் தென்காசி பாப்பன்குளம் பெரிய தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் ரகு (30), சமுத்திரம் மகன் தியாகராஜன்(60), குழந்தைவேல் மகன் பாலசுப்பிரமணியன்(30) ஆகிய 3 பேரும் கடந்த 3 நாள்களாக டேங்கை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுத்தப்படுத்தும் பணியின்போது, டேங் திடீரென வெடித்ததாம். இதில் ரகு, பெட்ரோல் விற்பனை நிலையத்தின் தொழிலாளி கோவில்பட்டி தாமஸ் நகரைச் சோ்ந்த ரா.ஜஸ்டின் (37) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

மேலும், டேங் வெடித்ததில் இருந்து சிதறிய பொருள்கள் அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த வடக்குப் புதுக்கிராமம் 4ஆவது தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் சண்முகம்(63) என்பவா் மீது விழுந்ததில் அவரும் காயமடைந்தாா்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. கலைகதிரவன், கிழக்கு காவல் ஆய்வாளா் சுதேசன் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் ரகு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.

ஜஸ்டின், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சண்முகம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com