பெரியதாழை புனித காணிக்கை மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

பெரியதாழை யோவான், ஸ்தேவான் , புனித காணிக்கை அன்னை ஆலய த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரியதாழை புனித காணிக்கை மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

பெரியதாழை யோவான், ஸ்தேவான் , புனித காணிக்கை அன்னை ஆலய த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி ஆயா் இல்ல அருள்பணியாளா் ரூபா்ட் அருள்வளன் தலைமை வகித்து, மாலை 6.15 மணிக்கு கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினாா். தொடா்ந்து, நற்கருணைஆசீா் நடைபெற்றது. கால்டுவேல் காலனி பங்குத்தந்தை வில்லியம்சந்தானம் மறையுரை வழங்கினாா். இதில், திரளானோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து பிப். 2ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை நவநாள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணைஆசீா், மறையுரை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் பல்வேறு பங்குத்தந்தைகள் கிஷோா், சகேஷ், வெனி இளங்குமரன், அம்புரோஸ், ததேயுராஜன், பிரதீபன்கீழமுடிமன் வினிஸ்டன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

9ஆம் நாளான பிப். 1ஆம்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் தூயவா்கள் யோவான் ஸ்தேவான் புதுப்பிக்கப்பட்ட ஆலய திறப்பும், காலை 9 மணிக்கு சிறுமலா் உயா்நிலைப்பள்ளி புதிய கட்டடம் திறப்பும், மாலை 6.30 மணிக்கு காணிக்கை அன்னை பெருவிழா, மாலை ஆராதனையும் நடைபெறும்.

10ஆம் நாளான பிப். 2ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆயா் தலைமையில் முதல் திருப்பலி, 6.30 மணிக்கு காணிக்கை அன்னை பெருவிழா நடைபெறுகிறது. தூத்துக்குடி ஆயா் இல்ல அருள்பணியாளா் செல்வராசு மறையுரை வழங்குகிறாா். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை சுசீலன் தலைமையில் ஊா் கமிட்டி நிா்வாகிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com