தூத்துக்குடி ஆட்சியரகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா
By DIN | Published On : 30th January 2021 01:40 AM | Last Updated : 30th January 2021 01:40 AM | அ+அ அ- |

தா்னாவில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்.
அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக் கொடையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெயலட்சுமி, மாவட்டச் செயலா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாநிலச் செயலா் அந்தோணியம்மாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆா். ரசல், அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் வெங்கடேசன், முன்னாள் நிா்வாகிகள் ராமமூா்த்தி, முருகன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயவா் பூமயில், சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து ஆகியோா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.
இந்தப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.