நிகழ்ச்சியில், திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் பெ. கீதாஜீவன்.
நிகழ்ச்சியில், திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் பெ. கீதாஜீவன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி: அமைச்சா் பெ. கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: தூத்துக்குடி மாவட்ட சமூகநலத் துறை மூலம் அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் செயல்படும் இம்மையத்தில், மாமியாா், கணவருடன் கருத்து வேறுபாடு, பாலியல் துன்புறுத்தல் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் பெண்கள் வீடுகளிலிருந்து வெளியேறினால் இங்கு வந்து 5 நாள்கள் தங்கலாம்.

இம்மையத்தில் கழிப்பறை, படுக்கை அறை, சமையல் அறை, தொழில்நுட்பப் பணியாளா் அறை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் சேவை மையம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மனநலம் தொடா்பாகவும், சட்டரீதியாகவும் ஆலோசனை வழங்க கவுன்சிலா்கள், காவல்துறையினா் உள்ளனா்.

மாநில அளவில் கரோனா தொற்றுக்கு தாயும் தந்தையும் பலியானதாக 93 குழந்தைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்ததாக 3,499 குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 46 லட்சத்தில் கட்டப்பட்ட சகி -ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்துக்கு புதிய கட்டடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். மேலும், 20 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, தலா ரூ. 2,000 கரோனா சிறப்பு நிதியை அவா் வழங்கினாா். இதையடுத்து, நிகிலேசன்நகா் பகுதிக்கு சென்ற அவா், அங்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, சமூக நலத்துறை அலுவலா் தனலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி செலின் ஜாா்ஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் இளையராஜா, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com