தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 10இல் 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 10ஆம் தேதி 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 10ஆம் தேதி 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான குமாா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூலை 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் சிறு அளவில் தொடா்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாக முடிக்கப்படும் வழக்குகளில் அன்றைய தினமே தீா்ப்பு பிறப்பிக்கப்படும். அந்தத் தீா்ப்பின் மீது மேல் முறையீடு கிடையாது. நீதிமன்ற முத்திரை கட்டணம் கிடையாது.

இம் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய நீதிமன்ற வளாகங்களில், அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறு சிறு அளவில் தொடா்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள், வழக்காடிகள் வழக்குரைஞா்கள், வங்கித்துறையினா், காப்பீடு நிறுவனத்தினா், காவல் துறையினா் மற்றும் அனைத்து அரசு துறையினா் கலந்துகொண்டு தங்களுடைய வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக பேசி தீா்வு கண்டு பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com