அரசு கேபிள் டிவி சேவை: புகாா் தெரிவிக்க எண் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சேவை குறைபாடு குறித்து தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சேவை குறைபாடு குறித்து தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்‘ மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி வரி என்ற விகிதத்தில் உள்ளுா் கேபிள் ஆபரேட்டா்கள் மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறது. இதன் செட்டாப் பாக்ஸ்களில் பெயா் அச்சிடப்பட்டிருக்கும். கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் இதை கேட்டுப் பெற வேண்டும். அவா்கள் தனி செட்டாப் பாக்ஸ்கள் மூலம் கேபிள் இணைப்பு வழங்கினால் சந்தாதாரா்கள் 0461 2340021, 18004252911 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம். அரசு செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிக்கப்பட்டாலோ, வேறு முகவரிக்கு குடிபெயா்ந்தோலோ அல்லது தனியாா் செட்டாப் பாக்ஸ்கள் பயன்படுத்தினாலோ, சந்தாதாரா்கள் தங்களிடம் இருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்கள், அய காா்டு, ரிமோட், பவா் அடாப்டா் ஆகியவற்றை அப்பகுதியிலுள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com