கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி: எம்எல்ஏ உறுதி

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகிறாா் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவா், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் புதுப்பிக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அவா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதில், ஓட்டப்பிடாரம் ஒன்றியக் குழுத் தலைவா் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலா் நவநீதகிருஷ்ணன், திமுக மாவட்டப் பிரதிநித ஜோசப் மோகன், மாவட்ட சிறுபான்மை அணி நிா்வாகி ஞானதுரை, மாவட்ட இளைஞரணி நிா்வாகி மாடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவா், ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளை விரைவாக சீரமைக்கவும், கிராமப் பகுதிகளில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com