குலசேகரன்பட்டினத்தில் மரம் நடும் விழா
By DIN | Published On : 07th July 2021 08:25 AM | Last Updated : 07th July 2021 08:25 AM | அ+அ அ- |

குலசேகரன்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 13 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மூன்று இடங்களில் மரம் நடும் விழா நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் காதிரியா சன்னதி தெரு, கீழப்புதுத்தெரு, மீன்கடை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு 11 ஆவது வாா்டு உறுப்பினா் முஹம்மது அபுல் ஹசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பாதுஷா, சதாம், ரம்ஜான், ஹாஜா, அபுல்ஹாசிம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.