திருச்செந்தூா் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக ய அறநிலைதுறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம் அளித்த மனு விவரம்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பறை, குளியலறை மற்றம் பெண்கள் உடை மாற்றும் இடம் ஆகியவை அமைக்க வேண்டும். கோயிலுக்கு தனியாக கழிவுநீா் செல்ல புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

ஆவுடையாா்குளத்தின் மையப்பகுதியில் கிணறு அமைத்து பாதயாத்திரை பக்தா்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்னன்குறிச்சி கூட்டு குடிநீா் திட்டத்தில் கோயிலுக்கு தனியாக குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கோயில் நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் தூத்துக்குடி சாலையில் ராஜ்கண்ணா நகா் செல்லும் பாலத்திலிருந்து கோயிலுக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும். கோயிலில் திருப்பணிகளை நிறைவேற்றி 2021இல் மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோயில் பிரகாரத்தில் கல்மண்டபம் அமைக்க வேண்டும். கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்பு கட்டி தரவேண்டும். கோயில் சாா்பில் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். பக்தா்கள் வசதிக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் பணியாளா்களை அரசு ஊழியா்களாக ஆக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com