குளத்தூா் அருகே விபத்து: பெண் பலி
By DIN | Published On : 11th July 2021 01:44 AM | Last Updated : 11th July 2021 01:44 AM | அ+அ அ- |

குளத்தூா் அருகே பனையூா் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
வேப்பலோடை ஆசீா்வாத செல்லையா மனைவி ரூபி(50). இவா் கடந்த 8 ஆம் தேதி இரவு, தனது உறவினரான சோலையப்பனுடன் குளத்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு திரும்பி வரும் போது, பனையூா் அம்மா பூங்கே அருகே பைக் திடீரென பழுதாகி சாலையோர பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த ரூபிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று ரூபியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து குளத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...