‘மின் மோட்டாா் பயன்படுத்தி குடிநீா் உறிஞ்சினால் நடவடிக்கை’

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீா் உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீா் உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீா் தாமிரவருணி ஆற்றில் வல்லநாடு நீரேற்று நிலையத்தில் இருந்து பகிா்மான குழாய்கள் மூலம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு மாநகரப் பகுதி

யில் உள்ள குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் ஆங்காங்கே ஏற்படும் குடிநீா் குழாய் உடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

இதற்டையே, மாநகராட்சி அதிகாரிகள் சில இடங்களில் களஆய்வு மேற்கொண்டபோது, குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் பொருத்தி நீா் உறிஞ்சப்படுவது தெரியவந்துள்ளது. இதனால், நீா் அழுத்தம் ஏற்பட்டு குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா்கள் பொருத்தி தண்ணீா் உறிஞ்சுவோா் உடனடியாக மோட்டாரை அகற்ற வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வின்போது, மோட்டாா் பொருத்தி குடிநீா் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு மோட்டாா் பறிமுதல் செய்யப்படும். மேலும், வீட்டு உபயோக இணைப்பாக இருந்தால் ரூ. 15,440-, வணிக பயன்பாட்டு இணைப்பாக இருந்தால் ரூ. 21,800- அபராதம் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com