நாசரேத் அருகே சூரியசக்தி மின்சாதனங்கள் சேதம்: 3 போ் கைது

நாசரேத் அருகே சூரிய சக்தி மின்உற்பத்தி சாதனங்களை சேதப்படுத்தியது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாசரேத் அருகே சூரிய சக்தி மின்உற்பத்தி சாதனங்களை சேதப்படுத்தியது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உடையாா்குளம் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் சூரிய சக்தி மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காவலாளியாக அதே ஊரைச் சோ்ந்த சங்கரசுப்பு (45) பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சுரேஷ் உள்ளிட்ட 11 போ் , அங்கு வந்து ரூ.10 லட்சம் தந்தால்தான் பணி நடைபெற அனுமதிப்போம் என காவலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 69 சூரிய சக்தி தகடுகள், 3 பைக்குகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் ராய்சன் வழக்குப்பதிந்தாா். காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சுரேஷ், கண்ணன் மகன் இசக்கி (30), தளவாய் மகன் சுபாஷ் (22) ஆகியோரை கைது செய்தனா்; 8 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com