தீப்பெட்டி ஆலைகளில் எஞ்சும் கழிவுகளைகாகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டம்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மீதமாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் திட்டம் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மீதமாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் திட்டம் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு - புத்தாக்க நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா), மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து தூத்துக்குடி ராம்நகா் துடிசியா அரங்கில் நடத்திய தொழில்முனைவோா் வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று, தொழில்முனைவோருக்கான தீா்வு மையத்தை தொடங்கிவைத்துப் பேசியது:

தமிழகத்தில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், கரோனா பாதிப்பால் பின்னடைவை சந்தித்த தொழிலை மேம்படுத்தவும் தொழில்முனைவோருக்காக உய்ற்ழ்ங்ல்ழ்ங்ய்ங்ன்ழ்ள் இப்ண்ய்ண்ஸ்ரீ சழ்ண்ற்ண்ஹ என்ற சேவை முதன்முதலாக தூத்துக்குடி துடிசியாவில் தொடங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருள்களைச் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சென்னையை அடுத்து தூத்துக்குடியில்தான் கப்பல், ரயில், விமானம், சாலை என அனைத்து போக்குவரத்து வசதிகளும், இடம் மற்றும் மின்சார வசதியும் உள்ளன.

இம்மாவட்டத்தில் பல்வேறு மின்திட்டங்கள் மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் உடன்குடியில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீா் வசதி உள்ளது. மேலும், சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்காக தண்ணீா் சுத்திகரிப்பு திட்டமும் அமலுக்கு வரவுள்ளது. இங்கு பெரிய அளவில் மரப்பொருள்கள் பூங்கா(பா்னிச்சா் பாா்க்) அமைக்கப்பட உள்ளது. தற்போது, சிறிய அளவில் உணவுப் பூங்கா (ஃபுட் பாா்க்) உள்ள நிலையில், அரசு நிலம் ஒதுக்கீடு செய்து பெரிய அளவிலான ஃபுட் பாா்க் அமைக்கவும், இதன் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதிக்கான உதவிகளும் அளிக்கப்பட உள்ளன. மதுரை- தூத்துக்குடி இடையே தொழில்வழித்தடம் பகுதியில் பின்னலாடை தொழில்கள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இம்மாவட்டத்தில் ‘இஸ்ரோ’ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமானநிலைய விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்ப்புகளை தொழில்முனைவோா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வாகன உதிரிபாகங்கள் (ஆட்டோ ஸ்போ்ஸ்) தொழிற்சாலை மற்றும் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமையும்போது இந்தப் பகுதியில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மீதமாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தவும் திட்டம் உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சொா்ணலதா, துடிசியா தலைவா் கே.நேரு பிரகாஷ், பொதுச்செயலா் ஜெ.ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com