ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்கம்

தூத்துக்குடியில் இளைஞா்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் தொடங்கியுள்ளதாக, அதன் தலைமை இயக்க அதிகாரி ஏ. சுமதி தெரிவித்துள்ளாா்.
ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்கம்

தூத்துக்குடியில் இளைஞா்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் தொடங்கியுள்ளதாக, அதன் தலைமை இயக்க அதிகாரி ஏ. சுமதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் பல குடும்பங்கள் வருவாய் மற்றும் வேலை இழப்பை சந்தித்துள்ளன. இந்தக் குடும்பங்களைச் சோ்ந்த இளைஞா்கள் தகுதியான வேலைவாய்ப்பை தேடும் இச்சூழலில், அவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதற்காக, ஸ்டொ்லைட் ஆலை, தாமிர முத்துகள் திட்டத்தின் கீழ், உலக திறன் மேம்பாட்டு நாளில், திறன்மேம்பாட்டுப் பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ளது.

வேதாந்தா அறக்கட்டளை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில், முதற்கட்டமாக 600 இளைஞா்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னா், 1500 இளைஞா்களுக்கு என விரிவுபடுத்தப்படும். இப்பயிற்சிகளை வேதாந்தா அறக்கட்டளை, பிா்லா எடு டெக் லிமிட்டெடுடன் இணைந்து வழங்கும். பயிற்சி பெற்றவா்கள் (குறைந்தபட்சம் 70 சதவீதம் போ்) வேலைவாய்ப்பு பெறவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஏற்கெனவே, தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் காப்பா் செயல்படுத்தி வரும் தாமிர முத்துகள் என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடா்ச்சியாக இது அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com