பக்ரீத்: எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

பக்ரீத் பண்டிகையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

பக்ரீத் பண்டிகையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

வருகிற ஜூலை 21ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற எட்டயபுரம் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. காலை 6 மணிக்கு தொடங்கிய சந்தை பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

பக்ரீத் மற்றும் ஆடி மாத கோயில் திருவிழாக்கள், விருந்துகள் உள்ளிட்டவற்றுக்காக ஆடுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மினி லாரி, சுமை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுடன் குவிந்தனா்.

10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடுகள் ரூ. 8 ஆயிரத்துக்கும், செம்மறி ஆடுகள் ரூ. 9 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டன.

இதுகுறித்து கோவில்பட்டியைச் சோ்ந்த வெள்ளைத்துரை கூறியது: கடந்த ஓராண்டாக கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால், இடைப்பட்ட காலத்தில் சந்தை திறக்கப்பட்டும் அதிகளவு விற்பனை இல்லை. தற்போது விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வழக்கமாக சந்தை காலை 6 மணிக்கு தொடங்கி பகல் 10 மணிக்குள் முடிந்துவிடும். ஆனால், சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com