பேய்க்குளம், கட்டாரிமங்கலம் கோயில்களில் வருஷாபிஷேகம்

பேய்க்குளம், கட்டாரிமங்கலம் கோயில்களில் ஆனி உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.

பேய்க்குளம், கட்டாரிமங்கலம் கோயில்களில் ஆனி உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கட்டாரிமங்கலம் ஸ்ரீ சிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தா் கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடா்ந்து கோபுர கலசம், அம்பாள், சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீா் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல் பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்மன் கோயிலில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டது. பின்னா் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com