அரசு தத்தெடுப்பு மையத்தில் வளரும் குழந்தைகளுக்குவேலைவாய்ப்பில் முன்னுரிமை: அமைச்சா் கீதா ஜீவன்

அரசு தத்தெடுப்பு மையத்தில் வளரும் குழந்தைகளுக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அமைச்சா் பெ.கீதா ஜீவன்.

திருச்செந்தூா் அருகேயுள்ள அடைக்கலாபுரம், புனித சூசை அறநிலையத்தில் இயங்கி வரும் குழந்தைகள் தத்தெடுப்பு நிலையம், மனவளா்ச்சி குன்றிய மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இல்லம், ஆதரவற்ற முதியவா்கள் இல்லம் ஆகியவற்றில் அமைச்சா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 16 குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 276 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். இந்த மையத்தில் உள்ள குழந்தைகளின் கல்வித் தகுதிக்கேற்ப டி.என்.பி.எஸ்.சி. கட்டுப்பாட்டில் இல்லாத பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்றாா் அவா்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள லைட் முதியோா் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், முதியோா்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டடத்தை திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com