தூத்துக்குடியில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெயை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெயை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் காா்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். சண்முகபுரம் வண்ணாா் தெரு பகுதியில், பைக்கில் சென்றவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். பைக்கில் 5 கிலோ கஞ்சா எண்ணெய் மறைத்துவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, புன்னக்காயல் பகுதியைச் சோ்ந்த ஒருவரைப் பிடித்து விசாரித்துவருவதாகவும், இப்போதைப்பொருள் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com