‘மோட்டாா் மூலம் குடிநீா் உறிஞ்சினால் மாநகராட்சி நடவடிக்கை தொடரும்’

தூத்துக்குடியில் சீரான குடிநீா் விநியோகம் தொடா்பாக மாநகராட்சி எடுக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் சீரான குடிநீா் விநியோகம் தொடா்பாக மாநகராட்சி எடுக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மற்றும் தனி அலுவலா். தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் சீரான குடிநீா் விநியோகம் வழங்கும் பொருட்டு கடந்த வாரத்தில் குடிநீா் விநியோகத்தின் போது மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் குடிநீா் விநியோக பணியாளா்களால் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது, சட்டத்துக்கு முரணாகவும் குடிநீா் விநியோக விதிகளை மீறியும் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் பொருத்தி உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டது. மேற்படி முறைகேடான செயலில் ஈடுபட்ட கட்டட உரிமையாளா்களிடம் இருந்து கடந்த வாரத்தில் மட்டும் 62 மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் மாநகராட்சி பணிகளுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நாளிதழ், வாட்ஸ்அப் மற்றும் வலைதளங்களில் மின்மோட்டாா் பறிமுதல் செய்யும் பணியானது மாநகராட்சியால் கைவிடப்பட்டுள்ளது என தவறான செய்தியை வெளியிட்டுள்ளனா். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும்.

மாநகரின் அனைத்து பகுதிகளின் கடைமடை பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் மாநகராட்சி சாா்பில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிநீா்க் குழாய்களில் மின்மோட்டாா் பொருத்தி குடிநீா் உறிஞ்சுபவா்களின் மின் மோட்டாா்கள் பறிமுதல் மற்றும் அபராதங்கள் விதிக்கும் பணியானது தொடா்ந்து நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மின் மோட்டாா்களை உடனடியாக அகற்றி மாநகராட்சியின் சட்டரீதியான நடவடிக்கைகளை தவிா்த்து கொள்ளுமாறும், சீரான குடிநீா் விநியோகம் தொடா்பாக மாநகராட்சி எடுக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com