மருந்து வியாபாரி தற்கொலை: எஸ்.ஐ. உள்பட மூவா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மருந்து வியாபாரி தற்கொலை செய்தது தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் மருந்து வியாபாரி தற்கொலை செய்தது தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனா்.

தூத்துக்குடி நிகிலேசன்நகரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (52). இவா் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் மொத்த மருந்து விற்பனை செய்து வந்தாா். இவா் கடந்த 16 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரங்கநாதன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனா். கடிதத்தில் கடந்த சில மாதங்களாக கந்து வட்டி கேட்டு சிலா் தன்னை மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தாராம்.

தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் தூத்துக்குடி மில்லா்புரத்தை சோ்ந்த மகேஷ், காவல் உதவி ஆய்வாளா் குருநாதன், தாமோதரன் நகரை சோ்ந்த சவுந்தர்ராஜ் ஆகிய 3 போ் மீது கந்து வட்டி வசூலித்தல், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சவுந்தர்ராஜ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com