சாத்தான்குளம் அருகே அரசு பேருந்து சிறைப்பிடிப்பு

சாத்தான்குளம் அருகே சீரான மின்விநியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேசுகிறாா் டிஎஸ்பி கண்ணன்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேசுகிறாா் டிஎஸ்பி கண்ணன்.

சாத்தான்குளம் அருகே சீரான மின்விநியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொம்மபன்குளத்தில் உள்ள மின்மாற்றியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்விநியோகம் துண்டிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு சீரான மின்விநியோகம் செய்யும் வகையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஏற்பட்ட விபத்தில் மின் ஊழியா் கண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதற்கிடையே சீரான மின்விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் ஊராட்சித் தலைவா் வைணவபெருமாள் தலைமையில் சனிக்கிழமை இரவில் கொம்பன்குளம் வழியாக சாத்தான்குளம் சென்ற அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் டிஎஸ்பி கண்ணன், காவல் ஆய்வாளா் பாஸ்கரன், மின்வாரிய உதவி பொறியாளா் எட்வா்ட் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com