மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 19th July 2021 12:28 AM | Last Updated : 19th July 2021 12:28 AM | அ+அ அ- |

கொம்மடிக்கோட்டையில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டோா்.
சாத்தான்குளம் கொம்மடிக்கோட்டை சு. சந்தோசநாடாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
இப்பள்ளியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கு மாணவா் சோ்க்கை, கல்வி தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் அட்டவணை விவரங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, பிச்சிவிளை, தாமரைமொழி, காந்திநகா், உசரத்துக் குடியிருப்பு, மணிநகா், தட்டாா்மடம், வாலத்தூா் உள்பட பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நடைபெற்றது.
பிரசாரத்தை பள்ளியின் தலைமையாசிரியா் ஷிபாசினி அமுதா தொடங்கி வைத்தாா். இதில், உடற்கல்வி ஆசிரியா் சித்திரைக்குமாா், ஓவிய ஆசிரியா் அசோக், தமிழாசிரியா்கள் பாலகிருஷ்ணன், ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.