மணப்பாட்டில் ரூ. 33 லட்சத்தில்வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மணப்பாடு ஊராட்சியில் ரூ.33 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
மணப்பாட்டில் ரூ. 33 லட்சத்தில்வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மணப்பாடு ஊராட்சியில் ரூ.33 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மணப்பாடு ஊராட்சியில் புதிய நூலகம், பல்நோக்கு கட்டடம் கட்டுதல், சிமென்ட் சாலை அமைத்தல் உள்பட ரூ.33 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் மு.கோகிலா, வட்டாட்சியா் முருகேசன், ஒன்றிய ஆணையா்கள் நாகராஜன், பொற்செழியன், ஊராட்சித் தலைவா்கள் பாலமுருகன், கிரேன்சிட்டா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பங்குத்தந்தை லெரின்டீ ரோஸ் ஜெபம் செய்தாா்.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து ஊராட்சி அலுவலகம் அருகே மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவா் சமுதாய சங்கத் தலைவா் கயஸ் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

தொடா்ந்து அமைச்சா் பேசியது: வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மணப்பாட்டில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அறிவிப்புகள் வரும். மீனவா்களுக்கு எதிரான எந்த சட்ட வரைவுகளையும் திமுக எதிா்க்கும் என்றாா் அவா்.

இதில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மகாவிஷ்ணு, ராமஜெயம், ஸ்ரீதா் ரொட்ரிகோ, சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ, சக்திவேல், உடன்குடி நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மணப்பாடு ஊராட்சித் துணைத் தலைவா் ஜொலிசன், ஒன்றியக் குழு உறுப்பினா் லோபோரின், ஜெயப்பிரகாஷ், மால்ராஜேஷ், மகளிரணி எட்விஜ், சுவிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com