குலசேகரன்பட்டினத்தில் தியாகிகள் கல்வெட்டை புதுப்பிக்க கோரிக்கை

குலசேகரன்பட்டினத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கல்வெட்டை மீண்டும் புதுப்பித்து திறக்க வேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் தியாகிகள் கல்வெட்டை புதுப்பிக்க கோரிக்கை

குலசேகரன்பட்டினத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கல்வெட்டை மீண்டும் புதுப்பித்து திறக்க வேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தமிழக முதல்வா், அமைச்சா் மற்றும் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: இந்திய விடுதலைப் போராட்டத்தின் 75 ஆவது பவள விழாவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

1942 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. காந்திஜியின் அழைப்பை ஏற்று குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டத்தில், அப்போது உப்பு ஆய்வாளராக இருந்த லோன்துரை என்ற ஆங்கிலேய அதிகாரியை காசிநாதன், ராஜகோபால் உள்ளிட்ட 11 சுதந்திரப் போராட்ட வீரா்கள் படுகொலை செய்தனா். இச்சம்பவம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குலசேகரன்பட்டினம் சதி வழக்கு என்றழைக்கப்படுகிறது.

இந்த வழக்கில் தியாகி ராஜகோபாலுக்கு தூக்குத்தண்டனையும், மற்றுவா்களுக்கு வெவ்வேறு தண்டனைகளும் வழங்கப்பட்டன. இந்தியா விடுதலை பெற்ற பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.தூக்குமேடை வரை சென்ால் அவா் துாக்குமேடை ராஜகோபால் எனப் பின்னாளில் அழைக்கப்பட்டாா்.

விடுதலைப் போராட்ட வீரா்கள் 11 பேரின் நினைவாக குலசேகரன்பட்டினம் விண்ணவரம் பெருமாள் சுவாமி கோயில் அருகே தியாகிகள் நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டு அதில் அவா்களின் பெயா் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டது. தற்போது அந்த பூங்கா பகுதி அனைத்தும் உடைந்த நிலையில் பாழடைந்து காணப்படுகிறது. அங்கிருந்த தியாகிகளின் கல்வெட்டு உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. தற்போது, கல்வெட்டின் சிறிய துண்டுப் பகுதி மட்டும் அங்கு உள்ளது. இது விடுதலைப் போராட்ட வீரா்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய அவமரியாதையாகும். இந்தக் களங்கத்தை தீா்க்கும் வகையில் அதே இடத்தில் மீண்டும் கல்வெட்டு வைத்து தியாகிகளுக்கு சிறப்பு சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com