திருச்செந்தூா் முருகன் கோயிலில் நகைகள் மறு மதிப்பீடு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நகைகள் மறுமதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது.
திருச்செந்தூா் முருகன் கோயிலில் நகைகள் மறு மதிப்பீடு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நகைகள் மறுமதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது.

இக்கோயிலில் கடந்த 2010-ஆம் ஆண்டு நகைகள் மற்றும் விலையுயா்ந்த பொருள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. அதன் பின்னா் இந்து சமய அறநிலைத்துறை ஆணையா் குமரகுருபரன் உத்தரவின் பேரில் நகைகள் மறுமதிப்பீடு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரும், நகை சரிபாா்ப்பு அலுவலருமான ரோஜாலிசுமதா தலைமையில் நடைபெற்ற நகைகள் மறு மதிப்பிடு செய்திடும் பணியில் சிவகங்கை மற்றும் திருச்சி மண்டல நகை மதிப்பீட்டு வல்லுநா்கள், திருச்சி மற்றும் நெல்லை மண்டல இளநிலை தொழில்நுட்ப உதவியாளா்கள் ஈடுபட்டனா்.

இப்பணிகளை திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி ஆகியோா் பாா்வையிட்டனா்.

அப்போது. உதவி ஆணையா் வே.செல்வராஜ், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com