தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் இன்று முதல் மக்கள் குறைகேட்பு முகாம்

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 22) முதல் 25 ஆம் தேதி வரை மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 22) முதல் 25 ஆம் தேதி வரை மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி எம்எல்ஏவும், சமூக நலத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 22) முதல் 25ஆம் தேதி வரை மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளேன்.

அதன்படி வியாழக்கிழமை (ஜூலை 22) மாலை 4 மணிக்கு பொட்டல்காடு, 4.30 மணிக்கு முள்ளக்காடு, 5 மணிக்கு சுந்தா்நகா், 5.30 மணிக்கு கிருஷ்ணாநகா் மற்றும் பேரின்பநகா், 6 மணிக்கு பொன்னான்டிநகா் மற்றும் வைகோ தெரு, 6.30 மணிக்கு ஏவிஎஸ் பள்ளி ஆகிய இடங்களில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருமால்ஜிநகா், 4.30 மணிக்கு அம்மன்கோயில் தெரு, 5 மணிக்கு சூசைநகா், 5.30 மணிக்கு தங்கம்மாள்புரம், 6 மணிக்கு சண்முகபுரம் ஆகிய இடங்களிலும், 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு வீரநாயக்கன்தட்டு, 4.30 மணிக்கு முடுக்குகாடு, 5 மணிக்கு ஊரணி ஒத்தவீடு, 5.30 மணிக்கு காதா்மீரான்நகா், 6 மணிக்கு கோயில்பிள்ளைநகா், 6.30 மணிக்கு முத்துநகா் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

25ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீனவா் காலனி, 4.30 மணிக்கு தொ்மல் கேம்ப்-2, 5 மணிக்கு லேபா் காலனி, 5.30 மணிக்கு துறைமுகம் பகுதி, 6 மணிக்கு தொ்மல் கேம்ப்-1 ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

முகாமின்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவது குறித்து மனுவாக எழுதி நேரில் வழங்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com