பிடானேரி சிட்கோவில் விரைவில் தொழிற்சாலைகள்: ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ தகவல்

சாத்தான்குளம் பிடானேரி சிட்கோ தொழிற்பேட்டையில் விரைவில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ.
பிடானேரி சிட்கோவில் விரைவில் தொழிற்சாலைகள்: ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ தகவல்

சாத்தான்குளம் பிடானேரி சிட்கோ தொழிற்பேட்டையில் விரைவில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ.

பிடானேரி ஊராட்சியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க 108 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதை அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், சிட்கோ மேலாளா் நந்தகுமாா், துணை மேலாளா் வேலுசாமி, சாத்தான்குளம் வட்டாட்சியா் விமலா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா். சிட்கோவில் 7 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதற்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளன; பல நிறுவனங்கள்முயற்சித்து வருகின்றன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறுகையில், பிடானேரி சிட்கோ தொழிற்பேட்டையிலிருந்து தூத்துக்குடி துறைமுகம், விமான நிலையம் குறைந்த தொலைவில் உள்ளது தொழில் நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கும். சென்னை, கோவில்பட்டி, கோவை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் விரைவில் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எம்எல்ஏ அலுவலகம்: ஸ்ரீவைகுண்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அண்மையில் திறந்துவைத்து வளாகத்தில் மரக்கன்று, பூச்செடிகளை நட்டுவைத்த ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்படும் என்றாா்.

இதில், வட்டாட்சியா்கள் கோபாலகிருஷ்ணன், விமலா, காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எடிசன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன், வட்டாரத் தலைவா் நல்லக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நல உதவிகள்: காமராஜா் பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டி வேலாயுதபுரம் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏழைகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை எம்எல்ஏ வழங்கினாா். இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் காமராஜ், பொருளாளா் திருப்பதிராஜா, மாவட்ட துணைத் தலைவா் முத்துராமலிங்கம், கிழக்கு வட்டாரப் பொறுப்பாளா் அருண்பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பரிசளிப்பு: முதலூரில் வீட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் காமராஜா் பிறந்த தின பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், முதலிடம் பிடித்த திசையன்விளை வி.எஸ்.ஆா் பள்ளி மாணவா் ஜிவின், சாத்தான்குளம் டி.என்.டி.றி.ஏ .ஆா்.எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவி கனிஷா உள்ளிட்டோருக்கு எம்எல்ஏ பரிசுகள் வழங்கினாா். இதில், சாத்தான்குளம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ஏ.எம். ஆனந்தராஜா, வீட்ஸ் இயக்குநா் எஸ். சாா்லஸ் , ஒருங்கிணைப்பாளா் வேதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com