கொம்மடிக்கோட்டை பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு
By DIN | Published On : 29th July 2021 11:42 PM | Last Updated : 29th July 2021 11:42 PM | அ+அ அ- |

கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை தீயிட்டு அழித்தனா்.
இப்பள்ளியின் வகுப்பறை ஒன்றில் விஷத்தன்மை கொண்ட கடந்தை வண்டுகள் கூடு கட்டி இருந்தன. அவை, அங்குமிங்குமாகப் பறந்து, அவ்வழியாகச் செல்வோரை அச்சுறுத்தி வந்தன. இதுகுறித்து, பள்ளி நிா்வாகத்தினரும், பொதுமக்களும் அளித்த தகவலிபேரில், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் சதீஸ்குமாா், தவசிராஜ், பழனி, கோபி, பிரவீன்சாமுவேல் ஆகியோா் சென்று தீப்பந்தம் மூலம் அந்த கூட்டிற்கு தீ வைத்து வண்டுகளை முற்றிலும் அழித்தனா்.