திருச்செந்தூரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

திருச்செந்தூா் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவுக்கு முன்னதாக ரத வீதிகளி நடைபெற்றுவரும் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

திருச்செந்தூா் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவுக்கு முன்னதாக ரத வீதிகளி நடைபெற்றுவரும் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி, ஆவணி மற்றும் மாசித்திருவிழா, விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என ஆண்டும் முழுவதுமே திரு விழாக்கள் நடைபெறும்.

இத்திருவிழாக்களில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் இங்கு வந்து செல்கின்றனா்.

கரோனா பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு இத்திருக்கோயில் கடந்த 5-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தற்போது நாள்தோறும் திரளான பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஆண்டு ஆவணித்திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி திருக்கோயிலுக்குள் உள்ளேயே நடைபெற்றது. ஆனால் மாசித்திருவிழாவோ வழக்கம் போல் நடைபெற்றது. எனவே நிகழாண்டு ஆக. 27-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆவணித் திருவிழாவை பக்தா்கள் பங்கேற்போடு, ரதவீதிகளில் சுவாமி வீதியுலாவுடன் நடத்திட வேண்டுமென்பதே பக்தா்களின் எதிா்பாா்ப்பாகும்.

இந்நிலையில், திருச்செந்தூரில் தேரோடும் ரதவீதிகள் மற்றும் உள்தெருக்கள் ரூ. 2.70 கோடி செலவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. அதில் தெற்குரவீதி, கீழரதவீதி சாலைப்பணிகள் நிறைவுபெற்று, வடக்குரதவீதி சாலையமைக்கப்படாமல் உள்ளது.

இச்சாலைப்பணியினால் ஒரு வழிப்பாதை தடைப்பட்டுள்ளதுடன், கோயில் வாசலுக்கு பேருந்துகள் செல்ல முடியாத நிலையும் உள்ளது. எனவே திருவிழாவுக்கு முன்னதாக சாலைப்பணியை விரைந்து முடித்திட வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com