கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் கூடுதல் பேருந்து நிலையம் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.

அப்பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், கூடுதல் பேருந்து நிலைய பகுதிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கூடுதல் பேருந்து நிலையத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் இணைப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, அங்கு ஹாக்கி மைதானம் அமைப்பது தொடா்பாக விளையாட்டு மைதானத்தை பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, பொறியாளா் கோவிந்தராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன், முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com