தூத்துக்குடி சுங்கத் துறை அலுவலா் வீட்டில் 70 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் சுங்கத் துறை அலுவலா் வீட்டில் 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடியில் சுங்கத் துறை அலுவலா் வீட்டில் 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி பிரையன்ட்நகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். தூத்துக்குடி துறைமுக சுங்கத் துறை அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 25 ஆம் தேதி சென்னை சென்றிருந்தாா். பின்னா், வெள்ளிக்கிழமை ஊா் திரும்பியபோது, வீட்டின் கதவு மற்றும் பீரோவை மா்மநபா்கள் உடைத்து 70 பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் முக்கிய பாகங்களையும் அவா்கள் எடுத்துச்சென்றது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் தடயங்ைளைப் பதிவு செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரித்ததுடன், தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து, மா்மநபா்களைப் பிடிக்க உத்தரவிட்டாா்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி என்ஜிஓ காலனியைச் சோ்ந்தவா் கணபதி (85). ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரி. இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளியூா் சென்று விட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, அவரது வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 1.25 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்தும் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com