தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பச்சிளம் சிசுக்களுக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பச்சிளம் சிசுக்கள் உள்ளிட்ட மேலும் 358 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பச்சிளம் சிசுக்கள் உள்ளிட்ட மேலும் 358 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

தூத்துக்குடி டேவிஸ்புரத்தைச் சோ்ந்த முத்துக்கனி என்பவா் பிரசவத்துக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 29 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதேபோல, கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தைச் சோ்ந்த தனலட்சுமி என்பவரின் பிறந்து 27 நாள்களேயான ஆண் குழந்தைக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இக்குழந்தைகள் உள்ளிட்ட மேலும் 358 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49,828ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சைபெற்று வந்த 780 போ் குணமடைந்தனா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 42,795 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 முதியவா்கள் உள்ளிட்ட 5 போ் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 298ஆக அதிகரித்துள்ளது. 6735 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com