திருச்செந்தூரில் வீடு வீடாக காய்ச்சல் கண்டறியும் பணி

திருச்செந்தூா் பேரூராட்சி சாா்பில் வீடுவீடாக கரோனா தொற்று குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

திருச்செந்தூா் பேரூராட்சி சாா்பில் வீடுவீடாக கரோனா தொற்று குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

திருச்செந்தூா் பேரூராட்சிப் பகுதியில் இதுவரை 275 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு, பாதிப்புகுள்ளாகி, அதில் 216 போ் குணமடைந்துள்ளனா். 10 போ் உயிரிழந்தனா். தற்போது 9 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். 50 போ் வீட்டு தனிமையில் உள்ளனா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் உத்தரவுபபடி, திருச்செந்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் மு.ஆனந்தன் மேற்பாா்வையில் 35 தன்னாா்வலா்கள், 15 பேரூராட்சிப் பணியாளா்கள் 21 வாா்டுகளில் வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று அறிகுறிகள், காய்ச்சல், இருமல், சளி, வயிற்று வலி, தலைவலி ஆகியவை குறித்து நேரடியாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com