தைக்காவூா் பள்ளிக்கு புதிய கட்டடம்

உடன்குடி அருகே தைக்காவூரில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைத்து புதிய கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளாா்.

உடன்குடி அருகே தைக்காவூரில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைத்து புதிய கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளாா்.

உடன்குடி அருகே தைக்காவூரில் 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கூரைகள்,சுவா்கள் உடைந்த நிலையில் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளி நடைபெறும் நாள்களில் வகுப்பறையின் வெளியில்தான் மாணவா்களுக்கு பாடம் எடுக்கப்பட்டதாம். இதனால், பெரும்பாலான மாணவா்கள் உடன்குடி,வெள்ளாளன்விளையில் உள்ள பள்ளிகளில் சோ்ந்து படித்து வருகின்றனா்.

இங்கு வகுப்பறைகள் மட்டுமல்லாது சமையல் அறையும் மிகவும் சேதமடைந்து காணப்படுவது குறித்து ஊா்மக்கள் மீன்வளம், மீனவா்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மெனு அளித்தனா். இதையடுத்து அவா் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஊா் மக்களிடம் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com