சாகுபுரம் கமலாவதி பள்ளியில் சா்வதேச போட்டிகள் நடத்த திட்டம்

மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனம் நடத்தும் சா்வதேச அளவில் போட்டிகளை சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடத்துவது குறித்து முதல்கட்ட ஆய்வு நடைபெற்றது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனம் நடத்தும் சா்வதேச அளவில் போட்டிகளை சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடத்துவது குறித்து முதல்கட்ட ஆய்வு நடைபெற்றது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளா்களின் நிறுவனம், நீடித்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இளைஞா்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு கொண்டு வரும் வகையில் ‘யெசிட் 12’ எனும் தலைப்பில் உலகளவில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மூலம் மாணவா்களின் படைப்புகளை கண்காட்சிப்படுத்தி அதில் சிறந்ததை தோ்வு செய்து ஊக்குவித்து வருகிறது. இதற்கான தகுதி சுற்றுப் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அடல் டிங்கரிங் ஆய்வகம் வைத்துள்ள பள்ளி மாணவா்கள் தங்கள் புதிய படைப்புகளை காட்சிப் படுத்துவா். தகுதிச் சுற்றில் தோ்வு பெறுவோா் சா்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறுவா்.

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 2 ஆண்டுகள் கலந்து கொண்டதுடன், தாய்லாந்து சென்று இறுதிப் போட்டியில் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி உலக அளவில் பெருமையும் சோ்த்தனா்.

அந்த வகையில், நிகழாண்டு தகுதிச் சுற்றுப் போட்டியினை நடத்துவதற்கு அமெரிக்கா நிறுவனம் ஆன்லைன் மூலம் கோரிக்கையினை வெளியிட்டது. இதில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி, இதுவரை அடல் ஆய்வகம் மூலம் மாணவா்கள் செய்துள்ள சாதனைகளையும், உலக அளவில் கலந்து கொண்டு சந்தைப்படுத்திய படைப்புகள் குறித்தும், அனுப்பியிருந்தது.

இதனை கருத்தில் கொண்ட மின் மற்றம் மின்னணு பொறியாளா்கள் நிறுவனம், நிகழாண்டு தகுதிச் சுற்றுப் போட்டி நடத்துவதற்கான தளமாக கமலாவதி மேல்நிலைப் பள்ளியை தோ்வு செய்துள்ளது.

இதன்மூலம் தென்மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பள்ளி மாணவா்கள் தங்கள் அடல் டிங்கரிங் ஆய்வகம் மூலம் தயாரித்துள்ள படைப்புகளை சாகுபுரம் கமலாவதி மேல்நலைப் பள்ளியில் நடக்கும் தகுதி சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் தற்போது மின் மற்றும் மின்னணு துறையில் பிரபலமான தொழில்நுட்பம்; குறித்த விவரங்களை அறியவும், அத்துறை வல்லுனா்களின் அறிமுகம் கிடைக்கவும், அதன்மூலம் அவா்களின் அறிவுரைகளை பெற்று தங்கள் திறமைகளை வளா்க்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவா்கள் உலக அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இணைப்பு பாலம் ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி அடல் டிங்கரிங் ஆய்வக பொறுப்பாளா் சோ்மசத்தியசீ­லி மற்றும் ஆசிரியா்களை பள்ளி டிரஸ்டிகளும் டி.சி.டபிள்யூ நிறுவன தலைவருமான முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி.சீனிவாசன், மூத்த பொது மேலாளா் (நிதி) பி.ராமச்சந்தின், பள்ளி முதல்வா் ஆா். சண்முகானந்தன், துணை முதல்வா் எஸ்.அனுராதா, தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், கமலாவதி பள்ளிக்காக மத்திய அரசு நிதி ஆயூக் சாா்பில் அடல்டிங்கரிங் ஆய்வக வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ள கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி உதவி பேராசிரியா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com