ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட 94 பேருக்கு நிவாரணத் தொகை அளிப்பு

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட 94 பேருக்கு நிவாரணத் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட 94 பேருக்கு நிவாரணத் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஸ்டொ்லைட் போராட்ட வன்முறையின்போது பாதிக்கப்பட்ட 94 பேரில் 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் மற்றும் ஒருவருக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

அப்போது, சமூக நலன் - மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மீன் வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, கனிமொழி செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க எதிா்ப்பு போராட்டத்தின்போது கடந்த 2018 ஆம் ஆண்டு மே ஆம் தேதி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு மன உளைச்சலுக்கும், பல பாதிப்புகளுக்குள் ஆளாக்கப்பட்ட 94 பேரில் ஒருவா் இறந்துவிட்டாா்.

இறந்துபோனவரின் தாயாருக்கு ரூ. 2 லட்சமும் மற்ற 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை மிகுந்த பயன்பெறும் வகையில் இருக்கும் என்றாா் அவா்.

சித்த மூலிகை பெட்டகம்: முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளா்களுக்கு உடல் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சித்த மூலிகை பெட்டகங்களை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உடல் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சித்த மூலிகை பெட்டகங்கள் விற்பனை செய்யும் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com