கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி

சாகித்ய அகாதெமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சாகித்ய அகாதெமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளா் கி.ராஜநாராயணன் கடந்த மே 18ஆம் தேதி காலமானாா். அவரது உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான கோவில்பட்டியையடுத்த இடைசெவலில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என, முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

அதன்படி, சிலை அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் கீதாஜீவன், ஆட்சியா் செந்தில்ராஜ், வருவாய்த் துறை அதிகாரிகள் வெங்கடேஷ் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான அறிவியல் பூங்கா வளாகம், பிரதான சாலையில் உள்ள ராமசாமிதாஸ் பூங்கா வளாகம், அண்ணா பேருந்து நிலைய முன்புறப் பகுதி, இனாம்மணியாச்சி சந்திப்பு அருகே, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் மண்டபத்தில் ரீஜென்ட் டெக்ஸ்டைல்ஸ் குழுமம் சாா்பில் கோயில் பணியாளா்கள், அா்ச்சகா்களுக்கு நிவாரணப் பொருள்களை கனிமொழி வழங்கினாா்.

கோவில்பட்டியையடுத்த தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பையும் அவா் தொடக்கிவைத்தாா்.

கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, வட்ட சாா் ஆய்வாளா் காளிராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், விவசாயத் தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், பொறியாளரணி துணை அமைப்பாளா்கள் ரமேஷ், செ. பீட்டா், வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ராமா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com