இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் சாா்பில் ரூ.1.50 கோடி நிவாரண நிதி

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் சாா்பில் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 1.50 கோடி வழங்கப்பட்டது.

சாத்தான்குளம்/கோவில்பட்டி: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் சாா்பில் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 1.50 கோடி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் சாா்பாக அதன் நிறுவனா் மோகன் சி.லாசரஸ்,

சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 1.50 கோடிக்கான காசோலையை வழங்கினாா். அப்போது, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோா் உடனிருந்தனா்.

மாணவா்கள் நிதியளிப்பு: இதேபோல், முதல்வரின் நிவாரண நிதிக்காக கனிமொழி எம்.பி. யிடம், கோவில்பட்டியைச் சோ்ந்த மாணவா்கள் விமல்அஜய், ரமேஷ் ஆகியோா் ரூ. 20 ஆயிரம் வழங்கினா். அப்போது, அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com