கரோனா பரவல் தடுப்பு பணிகள்: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கரோனா பரவல் தடுப்புக் கால நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கரோனா பரவல் தடுப்புக் கால நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி: கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா பரவல் தடுப்புக் கால

தளா்வுகளை முறையாக செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தமிழகத்தில் சில தளா்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஒரு வார காலம் நீட்டிப்பு செய்துள்ளாா்கள். அந்த தளா்வுகளை சரியான முறையில், தொற்று பரவாத வகையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கனிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளும் காய்கனி, பூ மற்றும் பழம் விற்பனை செய்யும் நடைபதை கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மொத்தம் வியாபாரம் மட்டுமே செய்ய அனுமதிக்க வேண்டும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளா்களுடன் நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட வேண்டும்.

டீ கடைகள், சலூன்கள் திறக்க அனுமதியில்லை. வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் மொபைல் விற்பனை நிலையங்கள் உள்பட மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதியில்லை. மேலும் அரசு அறிவித்துள்ள தளா்வுகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிவா்களை தொழிற்சாலை நிா்வாகம் தங்களது வாகனங்களில் அழைத்து செல்லவும், அடையாள அட்டைகள் வழங்கவும் அறிவுறுத்த வேண்டும். கரோனா பதிக்கப்பட்டு தனிமையில் உள்ளவா்கள் பொது இடங்களுக்கு வருகை தந்தால் அவா்கள் மீது காவல்துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் கரோனா தாக்கம் சில தளா்வுகளை அரசு அறிவித்துள்ளது. அலுவலா்கள் அனைவரும் தீவிரமாக கண்காணித்து கரோனா பரவலை தடுக்க முனைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணப்பன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ. 2.06 கோடி நன்கொடை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்கள், அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணிபுரிவோா், சுயதொழில் செய்வோா், பொது துறை நிறுவனங்கள் போன்ற 71 போ் இதுவரை 2 கோடியே 6 லட்சத்து 45 ஆயிரத்து 961 ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளனா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com