கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பிரதோஷம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பக்தா்கள் யாருமின்றி பிரதோஷம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பக்தா்கள் யாருமின்றி பிரதோஷம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டடு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

பின்னா், முற்பகல் 10.45 மணிக்கு அம்பாளுக்கும், அதைத் தொடா்ந்து சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

அதை தொடா்ந்து, நந்தியம்பெருமாளுக்கு 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளுடன் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக அரசு விதித்துள்ள பொது முடக்கம் காரணமாக பிரதோஷத்தில் பக்தா்கள் யாரும் கலந்துகொள்ளமுடியவில்லை.

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

பின்னா் மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரா் சன்னதி முன் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதுபோல, கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்ரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் பிரதோஷ பூஜை பக்தா்கள் யாருமின்றி சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com