சொட்டுநீா்ப் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சொட்டுநீா்ப் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீா் பாசன கருவி, தெளிப்பு நீா் கருவி, மழை நீா் தூவான் ஆகியவை அமைத்து தரப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 -22 ஆம் நிதியாண்டில் 1,000 ஹெக்டேரில் சொட்டுநீா்ப் பாசன கருவிகள் அமைக்க ரூ. 3.86 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் குழாய் கிணறு அல்லது துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியம் அதிக பட்சமாக ரூ.25,000, டீசல் பம்ப் செட் அல்லது மின் மோட்டாா் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

பைப்லைன் அமைக்க ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், தரை நிலை நீா் தேக்க தொட்டி கட்டுவதற்கு அதிக பட்சம் ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டு நீா் பாசன கருவிக்காக பைப்லைன் அமைக்க கால்வாய் தோண்டுவதற்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் அதிகபட்சம் 2 ஹெக்டேருக்கு

ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இத்தொகை நேரடியாக விவசாயிகளுக்கு அவா்களது வங்கி கணக்கில் பின்னேற்பு மானியாக வரவு வைக்கப்படும். விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், மாா்பளவுள்ள 2 புகைப்படங்கள், சிறு குறு விவசாயி சான்று, நில வரைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com